பிக்பாஸ் பிரபலத்தின் படத்தில் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 04:04 pm
yashika-anand-in-bindhu-mathavi-s-film

நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கழுகு. இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சத்ய சிவாவே இயக்கும் கழுகு 2 படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவியே மீண்டும் ஜோடியாக நடிக்கின்றார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் இதனைத் தயாரிக்கிறார்கள். இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு, பிக்பாஸ் 2 புகழ் யாஷிகா ஆனந்த நடனமாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

நடிகை பிந்து மாதவி கடந்த சீசனின் பிக்பாஸில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close