தமிழில் சூப்பர் ஹிட்டான படத்தின் தெலுங்கு ட்ரைலர்!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 04:13 pm
trailer-of-superhit-tamil-film-s-remake

கடந்த 2014-ல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்ற திரைப்படம் 'சதுரங்க வேட்டை'. இதனை அப்போதைய அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். அதன் பிறகு கார்த்தியை ஹீரோவாக வைத்து, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கி, அதிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றார். 

இதில் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சத்ய தேவ் ஹீரோவாகவும், நந்திதா ஸ்வேதா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு 'ப்ளஃப் மாஸ்டர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

அபிஷேக் பிக்சர்ஸின் ரமேஷ் பிள்ளை தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கோபி கணேஷ் இயக்கியிருக்கிறார். தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. 

தமிழில் வெற்றிப் பெற்ற இந்த படம், தெலுங்கிலும் வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close