ஓவியா ஆர்மியினருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 04:44 pm
oviya-single-from-svs-on-11th

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் திரைப்படம் ராட்சசன். 

தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே இதனைத் தயாரிக்கிறார். 

இதில் ரெஜினா ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் நடிகை ஓவியா நடித்திருக்கிறார். படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ். படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வெளியாகிறது. 

— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) December 8, 2018

இந்நிலையில் ஓவியா சிங்கிள் எனப்படும், 'டியோ ரியோ தியா' எனும் பாடலை வரும் 11-ம் தேதி வெளியிடுகிறார்களாம் படக்குழுவினர். சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட மனதிற்கினிய தோழியும், சிறந்த மனிதாபிமானியுமான ஓவியாவிற்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஷ்ணு, ஓவியா ஆர்மியினரே தயாராக இருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close