ரஞ்சித் வழங்கும் 'குண்டு' பர்ஸ்ட் லுக் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 05:24 am
ranjith-s-gundu-first-look-released

'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படத்தில், தினேஷ் நடித்து வருகிறார். குண்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கபாலி, காலா என சூப்பர்ஸ்டாருடன் இரண்டு தொடர் வெற்றிப் படங்களைத் வழங்கிய பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்து வந்தார். 

இந்த படத்திற்கு குண்டு என பெயரிடப்பட்டுள்ளது. 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என கூறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ரித்விகா, அனேகா, ராமதாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் தென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்; கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close