IARA விருதை வென்ற விஜய் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

  திஷா   | Last Modified : 12 Dec, 2018 01:52 pm
thalapathy-vijay-receives-international-best-actor-award-in-the-uk-in-person

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் போன வருடம் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். இயக்குநர் அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று நடிகைகள் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் என பல்வேறு கேட்டகரியில் பல விருதுகளை மெர்சல் படம் வென்றது. 

இந்நிலையில் IARA என்ற பெயரில் லண்டனின் வழங்கும் சர்வதேச விருதில், மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய் இடம்பெற்றிருந்தார். அதோடு சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்த விருதுக்காக இந்தியாவிலிருந்து தேர்வாகியிருக்கும் நடிகர் விஜய் மட்டும் தான். தற்போது சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை அவர் வென்றிருக்கிறார். இதற்காக லண்டனுக்கு விஜய்யை அழைத்து அந்த விருதை வழங்கியிருக்கிறது, IARA விருதின் தேர்வுக்குழு. 

தற்போது இதனை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் IARA பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் விஜய்யை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இதனை விஜய் ரசிகர்கள், ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close