5 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் யுவன்!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 08:50 am
yuvan-to-work-with-ajith-after-5-years

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம் நேற்று பூஜையோடு தொடங்கியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைக்கிறார். ஆரம்பம் படத்திற்கு பிறகு யுவன்-அஜித் கூட்டணி தற்போது இணைந்துள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், சிவாவுடன் அடுத்த படத்தில் இணையவில்லை. அதற்கு பதில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.  இந்த படத்தின் கதை பிங்க் ரீமேக்  என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் தல 59 என்று தற்போதைக்கு கூறப்படும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. பூஜையின் போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துககுக்கு  மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது. 

பின்னர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மங்காத்தா, ஆரம்பம், பில்லா, தீனா என அஜித் படத்திற்காக யுவன் இசையமைத்த பெரும்பாலான படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன. 

இந்நிலையில் இந்த கூட்டணி 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணை உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close