விஷ்ணுவின் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை வாங்கிய பிரபல நிறுவனம்!

  திஷா   | Last Modified : 15 Dec, 2018 04:29 pm
silukkuvarpatti-singam-satellite-rights-by-vijay-tv

ரசிகர்களைக் கவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நடிகர் விஷ்ணு விஷாலின் பாணி. இவர் நடிப்பில் உருவான 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது விஷ்ணு, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு இயக்குகிறார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே தயாரிக்கிறார். 

இதில் ரெஜினா ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் நடிகை ஓவியா நடித்திருக்கிறார். படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ். படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை முன்னணி தொலைக்காட்சியான, விஜய் டி.வி வாங்கியுள்ளது. 

இதனை விஷ்ணு அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close