பரியேறும் பெருமாளை கைப்பற்றிய விஜய் டி.வி!

  திஷா   | Last Modified : 15 Dec, 2018 04:32 pm
pariyerum-perumal-bagged-by-vijay-tv

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனின் தயாரிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இதனை இயக்குநர்கள் ராம் மற்றும் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். 

இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சப்போர்டிங் ரோலில் யோகி பாபு நடித்திருந்தார். சமூகத்தில் வேர் பரப்பி கிடக்கும் சாதிய கொடுமைகளை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்நிலையில் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டி.வி கைப்பற்றியிருக்கிறது. இதனை அந்தத் தொலைக்காட்சி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close