விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 09:22 pm
viswasam-songs-released-on-youtube

அஜித், நயன்தாரா நடிப்பில், சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பாடல்களின் ஆடியோவும் இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. 

'தல' அஜித், சிறுத்தை சிவாவுடன் சேரும் 4வது படமான விஸ்வாசம் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதால், படத்தின் மோஷன் போஸ்டர் முதல் சிங்கிள் டிராக் வரை சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பு இருந்தது. டி.இமான் இசையில், இதுவரை வெளியான அடிச்சுப்போடு, வேட்டி கட்டு பாடல்களின் லிரிக் வீடியோ, பல லட்சம் முறை யூடியூப்பில் பார்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், படத்தின் மொத்த ஆடியோவும் இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close