தன் உடலை விமர்சித்தவரை 'கூலாக' ஹேண்டில் செய்த டாப்ஸி!

  திஷா   | Last Modified : 18 Dec, 2018 02:55 pm
tapsee-s-bold-reply-on-twitter

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில் ஆங்கிலோ - இந்தியன் பெண்ணாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பிறகு ஆரம்பம், காஞ்சனா 2 என ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் நடித்தப் படம், 2015-ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை. அதன் பிறகு தமிழில் நடிக்காமல், தனது முழு கவனத்தையும் இந்தி சினிமாவில் செலுத்தி வருகிறார். 

தற்போது 'கேம் ஓவர்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சர்ச்சையான கேள்விகளுக்குக் கூட 'போல்டான' பதிலைத் தரும் டாப்ஸி, இப்போதும் அப்படியான செயலை செய்திருக்கிறார். 

ட்விட்டரில் அகு பாண்டே என்ற ஒருவர், "எனக்கு உங்கள் உடல் உறுப்புகளின் மீது கொள்ளை பிரியம்" என ட்வீட் செய்திருக்கிறார். அதற்கு நிச்சயம் டாப்ஸி கோபப்பட்டு ஏதேனும் திட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, "வாவ்! எனக்கும் அவற்றை மிகவும் பிடிக்கும். இதற்கிடையில் உங்களின் ஃபேவரிட் என்ன? எனக்கு எப்போதுமே (செரிப்ரம்) பெருமூளை தான் ஃபேவரிட்" என ட்விட்டரை தெறிக்கவிட்டிருக்கிறார் டாப்ஸி. 

— taapsee pannu (@taapsee) December 17, 2018

சர்ச்சையான கேள்வியை இவ்வளவு மெச்சூரிட்டியாக ஹேண்டில் செய்த, டாப்ஸிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close