ரசிகர்களின் ஆதரவில் 75 நாட்களைக் கடந்த 'ராட்சசன்'!

  திஷா   | Last Modified : 18 Dec, 2018 05:38 pm
ratsasan-75th-day

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான திரைப்படம், "ராட்சசன்". சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தை, இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியிருந்தார். 

விஷ்ணு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராட்சசன் படத்தில் ஹீரோயினாக அமலாபால் நடிக்க, கிறிஸ்டோபர் என்ற கொடூர வில்லனாக சரவணன் நடித்திருந்தார். ராமதாஸ், காளி வெங்கட், நிழல்கள் ரவி, ராதாரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு, ஜிப்ரன் இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க விறுவிறுப்பான கதைகளத்தில் அமைந்திருந்த இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 

— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) December 18, 2018

இந்நிலையில் இன்றுடன் இந்தப்படம் 75 நாட்களைக் கடந்திருப்பதாக நடிகர் விஷ்ணு அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close