2018-ல் முதலிடம் பிடித்த விஜய்யின் பாடல்!

  திஷா   | Last Modified : 21 Dec, 2018 04:29 pm
oruviral-puratchi-no-1-song-of-the-year

தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்கார்'. நடிகர் விஜய் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். ராதா ரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், கீர்த்திசுரேஷ், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 

இவரின் இசையில் பாடல்களும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் 2018-ன் சிறந்த 100 பாடல்களுள், சர்காரின் 'ஒரு விரல் புரட்சி' முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிரபல தனியார் பண்பலையின் 'டாப் 100 கலக்கல் ஹிட்ஸ்' என்ற தலைப்பின் கீழ் இந்தப் பாடல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக,  அந்த பண்பலை ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. தேர்தல் விழிப்புணர்வு குறித்த அந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close