தமிழக கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் விஜய்!

  திஷா   | Last Modified : 23 Dec, 2018 10:22 am
vijay-devarakonda-to-play-legendary-indian-cricketer-from-tamil-naduvijay-devarakonda-to-play-legendary-indian-cricketer-from-tamil-nadu

தெலுங்கில் அறிமுகமாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து 'நோட்டா' படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். 

தெலுங்கு, தமிழ் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது இவர் இந்தியிலும் அறிமுகமாகிறார். கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்த கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' என்ற படத்தில் தான் விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் கால் பதிக்கிறார். 

இயக்குநர் கபீர்கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இதில் தமிழக கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்தின் கேரக்டரில் நடிக்கிறார் விஜய்.  

தவிர, தற்போது இவர் 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close