கிளீன் 'யூ' சான்றிதழ் பெற்ற அஜித்தின் விஸ்வாசம்!

  திஷா   | Last Modified : 24 Dec, 2018 04:45 pm
viswasam-censored-with-u

நடிகர் அஜித் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். வீரம், விவேகம், வேதாளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார், இசையமைப்பாளர் டி.இமான். 

படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர், பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்!

இந்நிலையில் இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் விஸ்வாசம் படத்திற்கு கிளீன் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். தற்போது இந்தத் தகவலை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close