'எந்தன் கண்களை காணோம்!' - கண்ணே கலைமானே படத்தின் சிங்கிள் ட்ராக்

  திஷா   | Last Modified : 24 Dec, 2018 06:34 pm
kanne-kalaimaane-first-single-from-today

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இதனை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.

தர்மதுரை படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியும், தமன்னாவும் இதில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்த்ரா கஷ்யாப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 
 
தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் உதயநிதியே இந்த 'கண்ணே கலைமானே' படத்தைத் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

தற்போது இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'எந்தன் கண்களை காணோம்' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். 

இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close