இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்திருந்த திரைப்படம் 'சர்கார்'. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்தத் திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது. மெர்சலைத் தொடர்ந்து சர்காருக்கும் இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உருவாகியிருந்த இப்படம் கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்தது.
படத்தில் ஆளுங்கட்சியினரின் இலவச திட்டங்களை விமர்சித்ததால், பல பிரச்னைகளை சர்கார் சந்தித்தது. ஆனால், விஜய்யின் மாஸான படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது என்றார்ல் அது மிகையில்லை.
இந்நிலையில் இன்றோடு இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்திருக்கிறது.