த்ரிஷாவை காதலித்தேன்: ரானா ஓபன் டாக்!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 12:42 pm
rana-opens-up-about-trisha

நடிகர் ரானா, சமீபத்தில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் த்ரிஷாவை கொஞ்ச காலம் காதலித்ததாக தெரிவித்துள்ளார். 

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ரானா. ராணாவும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அப்போது இந்த தகவலை ரானா மறுத்தார். 

இந்நிலையில், கரண் ஜோஹர் நடத்தும் 'காபி விஃத் கரண்' நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ் மற்றும் ரானா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பல கேள்விகளுக்கு மூவரும் உற்சாகமாகப் பதிலளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரானாவிடம் த்ரிஷாவுடனான காதல் குறித்து கேள்வி எழுப்பினார் கரண் . அதற்கு “10 ஆண்டுகளுக்கு மேலமாக த்ரிஷா நல்ல தோழியாக இருந்தார். இடையே சில காலம் அவரைக் காதலித்தும் வந்தேன். பின்னர் சரிப்பட்டு வராத காரணத்தால் காதலை முறித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார். இப்பதிலுக்கு பிரபாஸ் கிண்டலாக, "இருவரையும் நான் சேர்த்து வைப்பேன்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close