தீபிகா பெயரில் தோசை! ரன்வீர் சிங் சொன்னது என்ன தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 03:48 pm
us-restaurant-has-dosa-named-after-deepika-padukone

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் தீபிகா படுகோனே பெயரில் தோசை விற்பனை செய்யப்படுவதை குறித்து தீபிகாவும், ரன்வீரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். 

டெக்சாஸ் மாகானத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீபிகா படுகோனே பெயரில் தோசை விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவர் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கும் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் உள்ள ஆஸ்டின் பகுதியில் தோசா லாப் எனும் இந்திய உணவகம் இயங்கி வருகிறது. இதில் தீபிகா படுகோனேவின் பெயரில் தோசை விற்பனையாகி வருகிறது. வெளியில் காரமான மிளகாயுடன், உள்ளே உருளைகிழங்கு ஸடஃப் செய்யப்பட்டது தான் இந்த தோசை. 

இந்த மெனு கார்ட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தீபிகா படுகோனே, யாராவது பசியில் இருக்கிறீர்களா என குறிப்பிட்டிருந்தார். இதே போல இந்த மெனுவை பகிர்ந்திருக்கும் ரன்வீர், "நான் இதை சாப்பிடுவேன்" என பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close