பேட்ட, விஸ்வாசம் படங்கள் எவ்வளவு நேரம்? லீக்கான செய்தி!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 06:23 pm
petta-viswasam-movie-run-time-information-out

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பல நடச்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள 'பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதேபோன்று சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள 'விஸ்வாசம்' படமும் அதே 10ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இரு பெரிய படங்கள் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவிருக்காது என்பது உண்மை தான். முன்னதாக இந்த இரண்டு படங்களின் ட்ரைலர்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் முதலில் 'பேட்ட' படத்தின் ட்ரைலர் வெளியாக, அதில் ரஜினி பேசும் வசனத்திற்கு, அடுத்து வந்த விஸ்வாசம் படத்தில், அஜித் பதில் சொல்வதாக வசனங்கள் இருந்தன. சமூக வலைத்தளங்களில், இந்த இரண்டு ட்ரைலர்களில் ரஜினி மற்றும் அஜித்தின் வசனங்கள் கலந்த சில வீடியோ கிளிப்பிங்ஸ் தான் தற்போது ஹாட் வீடியோஸ். 

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான 'ரன் டைம்' வெளியாகியுள்ளது. ரஜினியின் 'பேட்ட' படம் 2 மணி நேரங்கள் 50 நிமிடம், அஜித்தின் 'விஸ்வாசம்' படம் 2 மணி நேரங்கள் 32 நிமிடங்கள் ஓடும் என தகவல் கசிந்துள்ளது. 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close