த்ரிஷா என் கன்னத்தை கிள்ளினார்: சிறுவயது நினைவுகளை கூறிய துருவ்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:13 pm
dhruv-wants-to-act-with-trisha

தனக்கு த்ரிஷாவுடன் நடிக்க ஆசை என்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். 

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலா தயாரித்து இயக்கி உள்ளார். இந்த படம் காதலர் தினத்தையொட்டி  வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த கதாபாத்திரத்தில் துருவ் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் நடிகராவர்மா படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் படமாகும். மேலும் இப்படத்திற்கு குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூமுருகன் வசனம் எழுதி உள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் துருவ்விடம் எந்த நாயகியுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள துருவ், "த்ரிஷாவுடன் நடிக்க தான் ஆசை. அவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. ஒருமுறை பிரிவியூவ் ஷோவுக்கு சென்றிருந்த இடத்தில் நான் தூங்கிவிட்டேன். அப்போது எனது கன்னத்தை அவர் கிள்ளிவிட்டுச் சென்றார்" என்று நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close