பேட்ட படத்தின் இளமை திரும்புதே லிரிக்கல் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 02:31 pm
ilamaithirumbudhe-lyric-video

பேட்ட படத்தின் இளமை திரும்புதே பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கல் விருந்தாக வரும் 10ம் தேதி நாடு முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல  வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இதன் இளமை திரும்புதே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் வரிகள் எழுதி உள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close