விரைவில் இணையத்தில் வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:21 pm
ajith-kumar-s-viswasam-to-stream-on-amazon-prime

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் உரிமையை அமேசான் வாங்கியுள்ளது. 

இயக்குநர் சிவா - நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இமான் இசையில் வெளியான படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் விநியோகம் அனைத்து ஏரியாக்களிலும் முடிவடைந்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் அஜித் படம் வெளியாவது இதுவே முதல் முறை. 

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக்கிடைத்தது. 10ம் தேதி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கி உள்ளது. எனவே படம் வெளியான சில வாரங்களில் அமேசானில் வெளியாகும் என தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close