நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:54 am
actor-prakash-raj-will-be-contesting-from-bengaluru-central-constituency-for-parliament-election

வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

தொடர்ந்து அரசியல் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், "இந்த புத்தாண்டு தொடக்கத்தில் ஒரு புதிய தொடக்கம்.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்.  தொகுதி பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.  ஒரு குடிமகனாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்" என்றார்.

இதையடுத்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வருகிற மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close