ஐரோப்பாவின் மிகப்பெரிய தியேட்டரில் விஸ்வாசம்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:05 pm
viswasam-to-be-screened-in-le-grand-rex

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் வெளியாகும் 'தல' அஜித்தின் 'விஸ்வாசம்', ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தியேட்டரான பாரிஸின் 'ல கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர்ஸ்டாரின் பேட்ட திரைப்படங்கள் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகின்றன. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இரு படங்களும் வெளியாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், உலகின் புகழ்பெற்ற திரையரங்குகளுள் ஒன்றான பாரிஸ் நகரின் 'ல கிராண்ட் ரெக்ஸ்' தியேட்டரில் இரு படங்களும் வெளியாகின்றன. 2800 பேர் அமர்ந்து படம் பார்க்கக்கூடிய இந்த திரையரங்கம் தான், ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கமாகும். 

முதல் தமிழ் படமாக சூப்பர்ஸ்டாரின் கபாலி, இந்த பிரம்மாண்ட திரையரங்கில் திரையிடப்பட்டது. அதன்பின், மெர்சல், காலா, 2.0, சர்கார்  ஆகிய படங்கள் இதில் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்முறையாக அஜித்தின் படம் இங்கு திரையிடப்படுகிறது. பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் இரண்டுமே இதில் திரையிடப்படுவதால், பாரிஸ் நகரில் வாழும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close