ஷூட்டிங்குக்கு தயாரானதா ரஜினியின் நாற்காலி?

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 09:08 pm
rajinikanth-murugadoss-project-to-go-on-floors

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், வரும் 10ம் தேதி பேட்ட படம் ரிலீஸாகவுள்ள நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் காம்போவில், பேட்ட படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார் நவாசுதீன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால், படத்தின் மீது இமாலய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பத்தாம் தேதி அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்துடன் நேரடியாக மோதுகிறது பேட்ட. 
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸுடன் ரஜினி கூட்டணி போடப்போவதாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு நாற்காலி என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் - முருகதாஸ் படத்தின் ஷூட்டிங், பிப்ரவரி மாதம் துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close