ஆன்லைன் பைரசி குற்றங்களை தடுக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 02:55 pm
take-stop-the-crime-in-online-movie-released

ஆன்லைன் பைரசி குற்றங்களை தடுக்க நடிவக்கை எடுக்கவில்லையெனில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவோம் என ராஜா ரங்குஸ்கி மற்றும் ஒரு குப்பைக் கதை திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், ராஜா ரங்குஸ்கி மற்றும் ஒரு குப்பைக் கதை திரைப்பட தயாரிப்பாளர்கள் சக்தி வாசன், முகமது அஸ்லம் ஆகியோர் திரைப்பட திருட்டான ஆன்லைன் பைரசி குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "சிறு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இணையதள திரைப்படத் திருட்டை தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்கம், உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிடில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன்பு உள்ளிருப்பு  மற்றும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். 

திரைப்பட திருட்டிற்கு உடந்தையாக இருக்கும் மயிலாடுதுறை கோமதி திரையரங்கம், கரூர் கவிதாலயா திரையரங்கம் உள்ளிட்ட 9 திரையரங்குகளை தடை செய்யாவிடாமல், திரையரங்க சங்கத்தினர் அவர்களுக்கு சாதகமாக ரிட் மனு தாக்கல் செய்து உறுதுணையாக நிற்கும் பட்சத்தில், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ?

பைரசி குற்றத்தை கண்டுபிடித்து விட்டதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தனது பேட்டியில் கூறிய பின்பும் அவர்களை அடையாளம் காட்டாமல் கால தாமதம் காட்டி வருவது தவறு. உடனடியாக தங்களது நான்கு முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தயாரிப்பாளர் சங்கம் வரும் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் நிச்சயம்" என தெரிவித்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close