தமிழகத்தில் இனி நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது: சத்யராஜ்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:23 am
sathyaraj-about-tamilnadu-politics

தமிழகத்தில் இனி நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது என்றும், நல்லக்கண்ணு தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தான் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது கனா திரைப்படம். இந்த படத்தின் கேரள ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய நடிகர் சத்யராஜ், "நான் 41 ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் அரசியல் என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. முதல்வர் பதவியில் அமர்பவர்களுக்கு தியாகமும், அர்ப்பணிப்பும் தேவை.

எனவே அந்த பதவிக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். அந்த பதவிக்கு செல்ல நினைப்பவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் பிரச்னைகளைப் புரிந்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. முதல்வர் பதவியை குறிவைத்து தான் அவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அந்த பதவியை ஏற்கும் அளவுக்கு தகுதியான நடிகர்கள் யாரும் இல்லை. 

கேரள முதல்வர் பினராயி விஜயனை நான் மதிக்கிறேன். அவர் சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார். தமிழகத்திலும் அவரை போல நல்ல தலைவர்கள் உள்ளனர். எனவே நாம் நமது முதல்வர்களை திரைத்துறையில் இருந்து தேர்வு செய்யக்கூடாது. 

கேரள முதல்வர் போல் தமிழகத்தில் நல்லகண்ணு என்னும் சிறந்த தலைவர் இருக்கிறார். அவர்களை போன்றவர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார் அவர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close