காதலில் விழுந்த ஆர்யா... எங்க வீட்டு மாப்பிள்ளையில் பெண்ணை தேர்வு செய்யாததற்கு காரணம் இதுதானா?

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:06 pm

arya-to-marry-sayyeshaa-saigal

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் பல நாட்களாக சாக்லேட் பாய் பட்டத்துடன் இருப்பவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே, கலாப காதலா என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்த ஆர்யா, சமீப காலமாக தோல்வியை சந்தித்து வருகிறார். 

கடம்பன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறிது இடைவேளை விட்ட ஆர்யா பின்னர் சின்னத்திரையில் முகம் காட்டினார். தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியின்  மூலம் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. 16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக 3 பெண்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். ஆனால் வெறும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் துணைவியை தேர்வு செய்ய முடியாது என்று கூறிய ஆர்யா, எந்த முடிவும் எடுக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். 

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு வாரத்தில் ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா சைகல் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுவும் ஆர்யா அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்வு செய்யாததற்கு காரணம் என்று கோலிவுட் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர் என்றம் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இவர்கள் திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என்று சிலர் கூறுகின்றனர். ஆர்யாவை விட சயிஷா 17 வருடம்  இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.