படம் ஓடுதோ இல்லையோ; சக்ஸஸ் மீட் மட்டும் வைக்குறாங்க - ஐஸ்வர்யா ராஜேஷ்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 08:32 pm
aishwarya-rajesh-makes-fun-of-success-meet-trend

கனா படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றபோது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், படம் ஓடுதோ இல்லையோ சிலர் சக்ஸஸ் மீட் வைக்கிறார்கள் என கிண்டலடித்து பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் அடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கனா. கிராமத்தில் இருந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை பல்வேறு தடைகளை தாண்டி உலகக் கோப்பையை வெல்லும் கதையம்சம் என்பதால், படத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. போட்டியில் 5 படங்கள்  இருந்தாலும், படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ள நிலையில்,  நேற்று கனா சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இதில், படத்தின் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அருண் ராஜா காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்த படத்தின் வெற்றி உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ ஆனால் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்" என கூற அரங்கம் அதிர்ந்தது. முன் வரிசையில் இருந்து சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே, எழுந்து வந்து ஐஸ்வர்யாவை கீழே இறங்க சொல்லி செல்லமாக மிரட்டினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close