துல்கர் சல்மானுடன் கௌதம் மேனன் கூட்டணி!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:09 am

gautham-menon-teams-up-with-dulquer-salman

மலையாள நடிகர் துல்கர் சல்மான் அடுத்ததாக நடிக்கவுள்ள தமிழ் படத்தில், இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. 

துல்கர் சல்மான் தனது 25வது படத்திற்காக கோலிவுட் பக்கம்  திரும்பியுள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என பெயரிடப்பட்ட இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். ரீத்து வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கவும் மேனன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, பல்வேறு ப்ராஜெக்டுகளில் தீவிரமாக பணியாற்றி வரும் கௌதம், துல்கர் சல்மான் படத்தில் நடிக்க களமிறங்கியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய கவுதம் மேனன், சமீபத்தில் கோலி சோடா-2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக துல்கர் சல்மான் படத்தில், படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.