குத்தாட்டம் பக்கம் திரும்பியது ஏன்? - தமன்னா பதில்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:06 am
tamanna-talks-about-interest-in-item-songs

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம்வந்த நடிகை தமன்னா, கதாநாயகியாக தனது டான்ஸ் திறமையை காட்ட போதிய வாய்ப்புக்கள் கிடைக்காமல் போனதால், ஐட்டம் சாங்குகளில் குத்தாட்டம் போட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் அஜித், விஜய், மகேஷ்பாபு உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். அடுத்ததாக K2, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல், பல படங்களில் ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். ஜெய் லவகுசா, அல்லுடு சீனு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்ட தமன்னா, சமீபத்தில் வெளியான கன்னட சூப்பர் ஹிட் திரைப்படம் KGF-ல் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி இருந்தார்.

குத்தாட்டம் போடுவதில் தீவிரம் காட்டி வருவது ஏன் என்று தமன்னாவிடம் கேட்கப்பட்டதற்கு, "முன்னதாக என்னுடைய நடனத்திற்காக பேசப்பட்டேன். தற்போது கதாநாயகிகளுக்கு படங்களில் டான்ஸ் ஆட போதிய வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால், ஐட்டம் சாங்கில் ஆட வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொண்டு எனது திறமையை காட்டுகிறேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close