ஆன்லைன் பைரசி: 3 ஆண்டு சிறை..

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 09:21 am
online-piracy-3-years-jail

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

சினிமாவை பொறுத்தவரையில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைப்படங்கள் திரையரங்குக்கு வந்த சில மணி நேரங்களில் அல்லது வெளியாவதற்கு முன்பே அந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதனால், பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. 

இதுபோன்ற ஆன்லைன் பைரசி என அழைக்கப்படும் திரைப்பட திருட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டப்படி இது போன்ற குற்றசெயலுக்கு திரைப்பட சட்டம் 1952 பிரிவு 7ன் படி அபராதம் விதிக்கமுடியும். 

இந்நிலையில், தண்டனையை கடுமையாக்கும் வகையில் இந்த சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் திட்டமிட்டு, சட்ட திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது. அதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த புதிய சட்ட மசோதா விரைவில் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close