வெற்றிப்பெறாத படத்திற்கு வெற்றி விழா என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:31 pm
aishwarya-rajesh-apologizes-for-her-comment

கனா சக்சஸ் மீட்டில் தான் கூறிய கருத்துக்கு  ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கனா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் நேற்று முன் தினம் கனா சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இதில், படத்தின் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அருண் ராஜா காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்த படத்தின் வெற்றி தான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ ஆனால் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்" என கூறினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

 

சமீபத்தில் சர்கார் படத்தின் வெற்றி விழாவை பற்றி தான் பலரும் பேசினர். அதைப்பற்றி தான் ஐஸ்வர்யா கூறினார்  என்று சிலர் கிளப்பி விட விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். 

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "விளையாட்டாக தான் அதனை கூறினேன். நான் எந்த படத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை. அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன். ஒரு படத்தை எடுத்து அதனை வெற்றியடைய செய்வது எவ்வளவு கடினமான ஒன்று என்பது எனக்கு தெரியும். எனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால்... மன்னிப்பு கேட்கிறேன்" என  பதிவிட்டு இருந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close