பேட்ட சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லிடாதீங்க: கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:54 pm
karthik-subbaraj-statement

பேட்ட படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்களை யாரும் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கல் விருந்தாக  இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தொடர்ந்து வரும் அன்புக்கு நன்றி. பேட்ட படத்தின் கதையை, சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லாதீர்கள். தியேட்டரில் எடுக்கும் வீடியோக்களை பரப்பாதீர்கள், பைரசியை ஆதரிக்காதீர்கள். விஸ்வாசம் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close