நம்ம பூமி... தாய் மாதிரி: உதயநிதியின் கண்ணே கலைமானே டிரைலர்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:55 pm
kanne-kalaimane-trailer

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தர்மதுரை படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியும், தமன்னாவும் இதில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்த்ரா காஷ்யாப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் உதயநிதியே இந்த 'கண்ணே கலைமானே' படத்தைத் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

 

 

இந்த படத்தின் டிரைலரை நேற்று நடிகர் விஜய் சேதுபதி  வெளியிட்டார். சீனு ராமசாமியின் கிராமத்து ஸ்டைலில் வந்துள்ள டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close