தியேட்டரில் சீட் பிடிக்க தகராறு :அஜித் ரசிகர்களுக்கு கத்திக்குத்து

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 08:06 am
clashes-between-ajith-fans

அஜித், நயன்தாரா நடித்துள்ள "விஸ்வாசம்" திரைப்படத்தை காண, தியேட்டரில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறின்போது கத்திக்குத்துக்கு ஆளான ரசிகர்கள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அஜித் குமார், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று வெளியாகிறது. இதையொட்டி இன்று காலை ரசிகர்கள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர் நகரில் உள்ள அலங்கார் திரையரங்கில் முதல் ஆளாய் படத்தை கண்டு சாதிக்கும் வேகத்தில் ரசிகர்கள் முண்டி அடித்துக் கொண்டு திரையரங்கிற்குள் சென்றனர்.

அப்போது இருக்கைகளை பிடிப்பதில் ரசிகர்களின் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பிரசாந்த் மற்றும் அவரது உறவினர் ரமேஷுக்கு கத்திக்குத்துக்கு ஆளாகினர்.  

இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ரமேஷின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார், நான்கு பேரை தேடி வருகின்றனர்.

 newstm.in


 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close