தியேட்டரில் திருமணம் செய்துகொண்ட ரஜினி ரசிகர்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:00 pm
rajini-fan-got-marriage-in-theatre

சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில், ரஜினி ரசிகர் ஒருவர் திருமணம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ரஜினி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள "பேட்ட" திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கிலும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது, ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு திரையரங்க வளாகத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

அன்பரசு -காமாட்சி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துடன், திருமண சீதனமும் அளித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close