விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை எரித்த பாசக்கார மகன்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 09:11 am
son-burned-his-father

வேலூரில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் மகன் தந்தையை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அஜித்குமார் நேற்று விஸ்வாசம் படம் பார்க்க செல்ல பணம் தரும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க பாண்டியன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தந்தை தூங்கி கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த பாண்டியன், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close