விஸ்வாசம் சிறப்பு காட்சிகள் ரத்து

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 09:23 am
viswasam-special-show-canceled

சென்னையில் சங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. முன்னதாக காலை 8 மணிக்கு  தங்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

ஆனால், சிறப்பு காட்சிக்கு உரிய அனுமதி பெறவில்லையெனத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை சங்கம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணிக்கு, விஸ்வாசம்  சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

இதனிடையே, விஸ்வாசம் திரைப்படத்துக்கு  டிக்கெட் ரூ.1,000-க்கு விற்கப்படுவதாகக் கூறி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்க வளாகங்களின் முன் ரசிகர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். 

newstm.in 

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close