தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க தலைவா!- பேட்ட குறித்து தனுஷ்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 10:43 am
dhanush-about-petta

"பேட்ட" படம் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கல் விருந்தாக  இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ், தனது படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதில், "பேட்ட- காவியம்...சூப்பர் ஸ்டார்... லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க!. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ரஜினிஃபைட் (#Rajinified) ஆகிவிட்டோம். கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. அனிருத்... இது தான் உங்களது சிறப்பான பிஜிஎம். பேட்ட பராக்" என ட்விட்டரில் கொண்டாட்டமாக பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close