தமிழ் ராக்கர்ஸில் 'பேட்ட'; ரஜினி ரசிகர்கள் ஷாக்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 07:04 pm
petta-leaked-in-tamilrockers

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள பேட்ட திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியான நிலையில், தமிழ் ராக்கர்ஸில் லீக்காகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியான படம் 'பேட்ட'. பொங்கலை முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்கள் இன்று நேரடியாக மோதியதால் தியேட்டர்களில் ரசிகர்கள் அலை அலையாக குவிந்தனர். ரஜினியின் பேட்ட படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

விமர்சகர்களிடமும் 'பேட்ட' நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பேட்ட படம் லீக்காகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்ட மட்டுமல்லாமல், 'பரியேறும் பெருமாள்' நாயகன் திருநங்கையாக நடித்த சிகை என்ற திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸ்ஸில் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'சிகை', இப்போதே இணையத்தளத்தில் லீக்கானது, படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close