'பேட்ட' படத்தை தொடர்ந்து விஸ்வாசமும் தமிழ்ராக்கர்ஸில் லீக்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 06:06 am
ajith-s-viswasam-also-leaked-in-tamilrockers

ரஜினிகாந்தின் பேட்ட, கதிரின் சிகை ஆகிய படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணிநேரங்களில் அஜித்தின் விஸ்வாசம் படமும் லீக்காகியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒருபக்கம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, மற்றொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினிகாந்தின் பேட்ட படம் ரிலீஸ் ஆகி, இரண்டு மூன்று காட்சிகள் கூட முடிவடையாத நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் லீக்கானது. அடுத்த மாதம் ரிலீசாக இருந்த கதிரின் 'சிகை' திரைப்படமும் லீக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பேட்ட படத்திற்கு போட்டியாக, அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து பல்வேறு புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் லீக் செய்து வரும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் நிறுவனர்களை சைபர் போலீஸ் பிரிவு தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close