நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் பேட்ட: இந்திய கிரிக்கெட் வீரர்

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 02:14 pm
dk-praises-petta

பேட்ட தான் தான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பாராட்டி உள்ளார். 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். 

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்ட குறித்து ட்வீட் செய்துள்ளார். 

அதில், "பேட்ட நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம். ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது சிரித்த முகத்துடன் வந்தால் அந்த படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கும் என்பது தெரியும். இம்மாதிரியான அற்புதமான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். சிறந்த பின்னணி இசை அனிருத். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுக்கள்" என பதிவிட்டுள்ளார்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close