மீண்டும் இணையும் சல்மான்-பிரபுதேவா: சில மாதங்களில் தபாங் 3 ஷூட்டிங்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 11:18 am
salman-khan-to-finally-begin-shooting-for-dabangg-3-in-april

தபாங் 3 படத்தையும் பிரபு தேவா தான் இயக்குகிறார் என்பதை உறுதியாகி உள்ளது. 

நடிப்பிலும் நடனத்திலும் கலக்கி வந்த பிரபுதேவாவின் இயக்கத்தில் 2010ல் வெளியான இந்தி படம் தபாங். இந்தப் படத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தார். இந்த படம் வசூலில் சாதனை படைத்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து 2012ல் தபாங்’படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் ஹீரோயினாக சோனாக்‌ஷி சின்ஹாவே நடித்திருந்தார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். சல்மானின் சகோதாரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது. 

இதையடுத்து இதன் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை அர்பாஸ்கான் தயாரிக்கிறார். இந்தப் படத்தையும் பிரபுதேவாவே இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close