ரஜினியுடன் மோதி சூப்பர் ஸ்டார் அஜித் வென்றுவிட்டார்: விஸ்வாசம் தயாரிப்பாளர்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 12:48 pm
viswasam-producer-about-petta

ரஜினியுடன் மோதி அஜித் வென்றுவிட்டார் என்று விஸ்வாசம் படத்தின் தாயரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்தது. இதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேட்ட- விஸ்வாசம் மோதல் குறித்து பேசினார். அதில், "தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால் சினிமா ஸ்டிரைக்கால் அது தள்ளிப்போனது. அதனையடுத்து ஆகஸ்ட் மாதமே பொங்கல் ரிலீஸ் என அறிவித்து இருந்தோம். திடீரென சன் பிக்சர்ஸ் பேட்ட பொங்கல் ரிலீஸ் என கூறியது அதிர்ச்சியாக தான் இருந்தது. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். ஆனால், அவர்கள் பொங்கல் விடுமுறை என்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என கூறி விட்டனர்.

ரஜினியை வைத்து 6 படம் தயாரித்து விட்டதால் இந்த மோதல் கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது ரஜினியுடன் மோதி அஜித் வென்றுவிட்டார். படத்திற்க்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது" என்றார். 

மேலும் அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான் என்றும் அவர் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close