2019ன் சிறப்பான சம்பவம் இதுதான்: தளபதியுடன் நடிக்கும் உற்சாகத்தில் கதிர்!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 08:32 am
kathir-to-act-in-vijay-s-next

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பரியேறும் பெருமாள் கதிர் நடிக்க உள்ளார். 

தெறி, மெர்சல் படத்திற்குப் பிறகு அட்லீ – விஜய் கூட்டணி மூன்றாவதாக இணைகிறது. இதில் விஜய்யின் 63வது படமாகும். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள ‘தளபதி 63’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

 

 

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே முடிவாகி இருந்தது.  இந்நிலையில் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவமான ஏ.ஜிஎஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கதிர், "2019 இதைவிட சிறப்பாக மாறாது" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close