சூர்யா ரசிகர்களே... உங்களுக்கொரு குட் நியூஸ்!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 09:05 am
shooting-of-ngk-is-finally-wrapped

"தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்து வந்தார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். 

படத்திற்கு இசை செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். 

தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் வெளியாகிவரும் நிலையில், இந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் ட்வீட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

 

 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "சூர்யாவுடனான இந்த பயணம் சிறப்பாக இருந்தது. அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் ஆச்சர்யம் அடைந்துவிட்டேன். என்ஜிகே படக்குழுவினர் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

விரைவில் படம் ரிலீஸ் குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close