ஜனவரி 18 முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு: வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 07:14 am
indian-2-shooting-from-jan-18

ஜனவரி 18ம் தேதி முதல் தாய்வானில் தொடங்குகிறது இந்தியன் 2 திரைபடத்தின் படப்பிடிப்பு.

சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படம் உருவாகிறது. காஜல் அகர்வால் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்தி வெளியாகியது. குறிப்பாக கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ரவி வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி முதல் தாய்வானில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close