நம்பி நாராயணனாகவே மாறிய மாதவன்: இயக்குநராக புதிய அவதாரம்!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 02:40 pm
actor-madhavan-to-make-his-directorial-debut-with-rocketry-thenambieffect

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் மாதவன் அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளதோடு அந்த படத்தை தானே இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கி வந்தார்.

தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இப்படத்தில் இருந்து விலக, நடிகர் மாதவன் தனியாக இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக இப்படத்தை ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கப்போவதாக மாதவன் தெரிவித்திருந்தார்.

1990களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

 

 

ராக்கெட்ரி திரைப்படத்தை தனது கனவு படமாக கருதும் மாதவன், தற்போது இந்த படத்தில் தனது லுக்கையும் வெளியிட்டுள்ளார். 14 மணிநேர மேக்அப்பிற்கு பிறகு தான் நம்பி நாராயண் போலவே மாறியிருக்கும் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close