நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தடம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 12:35 pm
thadam-fron-feb-22

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண்விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி கூட்டணியில் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த தடையற தாக்க திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தடம்.

ஆக்சன் படமான இது கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போனது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அருண்விஜய் ஜோடியாக தன்யா நடித்துள்ளார். மேலும் வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு ஸ்மிருதி வெங்கட் உள்பட் பலர் நடித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close